சென்னை 195-ஆவது வட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.பாஸ்கரன் எழுதிய கடிதத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அதிமுக செயலாளர் எம்.பாஸ்கரன் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நான் 2006 மற்றும் 2011 பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றேன்.
25 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். ஆனால் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும், பகுதி செயலாளராகவும் இருந்த கே.பி.கந்தன் என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. நான் கட்சியில் இருந்து விலகுகிறேன். தர்மம் செத்து விட்டது” என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார்.