Categories
மாநில செய்திகள்

தர்மபுரி: மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் ஜூலை 2 ஆம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்களை பெறுவதற்காக பாப்பிரெட்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 02/07/2022 சனிக்கிழமையன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 2.00 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இந்த பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் கூறியிருப்பதாவது “தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவமுகாம் மாவட்டம் முழுதும் நடைபெற இருக்கிறது.

பாப்பிரெட்டிபட்டி மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் அடிப்படையில் பாப்பிரெட்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 02/07/2022 சனிக்கிழமையன்று காலை 10:00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் இது நாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு அதை வழங்குதல், மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட்கார்டு அடையாள அட்டை (UDID) வழங்குவதற்கான பதிவுசெய்தல் வசதிகள் இடம்பெறும். அத்துடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய்த் துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு, புதுபித்தல், வேலை வாய்ப்பற்றோர் நிதிஉதவித்தொகை கிடைப்பதற்கான முகாம் நடைபெறும்.

அதுமட்டுமன்றி தனியார்துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருதல், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியளித்தல், மாவட்ட தொழில் மையம் வாயிலாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல், (UYEGP) திட்டத்தின் கீழ் வங்கி கடன் உதவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தேசிய ஊனமுற்றோர் நிதிவளர்ச்சி, (NHFD) திட்டத்தின் வாயிலாக சுய தொழில் புரிவதற்கு வங்கிகடன் மற்றும் வீடுகட்டுவதற்கு கடனுதவி, ஆவீன் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கான முகவர்கள் நியமனம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டிற்கான உறுப்பினர் சேர்க்கை ஆகிய பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் பெறும் பொருட்டு, பல துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.

ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை (UDID), குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களையும் எடுத்துவர வேண்டும். அதன்படி பாப்பிரெட்டிபட்டி மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக பாப்பிரெட்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 02/07/2022 சனிக்கிழமையன்று காலை 10:00 மணிமுதல் மதியம் 2:00 மணிவரை நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |