Categories
உலக செய்திகள்

தரையில கால் பட்டாலே மயக்கம் வந்துரும்…. 24 மணி நேரமும் படுத்தே இருக்கும் பெண்….. மிரள வைக்கும் காரணம்….!!!!!

Maine அருகில் அமைந்துள்ள Bangor எனும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson(28). இந்த பெண்ணுக்கு மிக அரியவகை பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதாவது Postural Tachycardia எனும் தொற்று வாயிலாக Lyndsa பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதனால் அவர் உட்காரும் போதோ (அல்லது) நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில் அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு போகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் புவி ஈர்ப்பு (Gravity) மீதுள்ள அலர்ஜி காரணமாக தனக்கு இப்படி நிகழ்வதாக Lyndsi குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக Lyndsi Johnson பேசியதாவது, “எனக்கு புவி ஈர்ப்பு என்றால் ஒரு வித அலர்ஜி உள்ளது.

இது கேட்பதற்கு சிறு வித்தியாசமாக தோன்றலாம். எனினும் அதுதான் உண்மை. என்னால் 3 நிமிடத்திற்கு மேல் எழுந்து நிற்கமுடியாது. அவ்வாறு நின்றால் மயக்கமோ (அல்லது) உடல்நிலை சரியில்லாமலோ ஆகிவிடும். நான் படுத்து கிடக்கும்போது மட்டும்தான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நாள் முழுதும் 23 மணி நேரம் வரை நான் படுக்கையில் தான் இருக்கிறேன்” என Lyndsi கூறியுள்ளார். அவரது உடல்நிலை காரணமாக சென்ற 2018ம் வருடம் கடற்படையிலிருந்து Lyndsi விலகவேண்டிய கட்டாயம் உருவாகியது.

அதன்பின் 6 மாதங்களுக்கு பின் கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் இருந்துள்ளது. எனினும் Lyndsi-க்கு என்ன தவறு நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள் கணிக்கத் தவறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 3 தடவைவரை அவர் மயக்கமடைவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கால்மேல் கால் போட்டு இருந்தால்தான், உணவு அருந்தவும் குளிக்கவும் அவரால் முடியும் எனவும் தெரிகிறது. இது குணமடைய வாய்ப்பில்லை எனவும் இது அரிதான ஒன்று எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |