Categories
சினிமா தமிழ் சினிமா

தரம் தாழ்த்தி பேசிய ஆ.ராசா… தங்கர்பச்சான் கண்டனம்..!!

திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பதற்கு தங்கர் பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கு திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருவரும் பெயர் குறிப்பிடாமல் டுவிட்டரில் கண்டித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார காலம், ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்களின் அதிரடியான விமர்சனங்களால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ. ராசா  தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று அவதூறாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் தாய் மீது ஆ.ராசா வீசி உள்ள பழிச்சொல்லை திமுகவில் உள்ளவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று இயக்குனர் தங்கர்பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படியே போனால் பகுத்தறிவுப் பாசறையில் பாடம் பயின்றதாக கூறிக்கொண்டு பெருந்தலைவர்களின் படங்களை இனி பயன்படுத்துவது எந்தவித நியாயமும் இருக்காது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |