தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் ஆவார். இப்போது இவர் விஜய் ஆண்டணி நடிக்கும் கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், காக்கி போன்ற திரைப்படங்களை இன்பினிட்டி பிலிம் வென்சரின் சார்பாக தயாரித்து வருகிறார். இவரது மூத்தமகளான ரேவதியின் திருமணம் அபிஷேக்குமார் என்பவருடன் அம்பத்தூரிலுள்ள பிஎஸ்பி கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், பிரபல பேச்சாளருமான சிவகுமார் தன் குடும்பத்துடன் பங்கேற்று திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ். தாணு, சூப்பர் குட் ஆர்.பி. செளத்ரி, எடிட்டர் மோகன், ஜி. என். அன்பு செழியன், அபிராமி ராமநாதன், டி.ஜி. தியாகராஜன், பிரமிட் நடராஜன், டி. சிவா, கே.இ.ஞானவேல்ராஜா, பி.எல். தேனப்பன், புஷ்பா கந்தசாமி, கதிரேசன், லலித்குமார், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்ஷ்மணன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கமல்போஹ்ரா, பி.பிரதீப் உட்பட பலர் பங்கேற்றனர். அத்துடன் டிரைக்டர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர். பார்த்திபன், பாலா, ராம், மிஷ்கின், சுந்தர்.சி, வசந்த் சாய், சிறுத்தை சிவா, ஏ.எல். விஜய், எழில், சசி, சீனுராமசாமி, மோகன் ராஜா, லக்ஷ்மி ராம கிருஷ்ணன், ராதா மோகன், விஜய் மில்டன், திரு, பாண்டிராஜ், கருணாகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, அருண் வைத்ய நாதன், பாலஜிகுமார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணா, கவுரவ் நாராயணன், ஆர். கண்ணன், மிலிந்த் ராவ், ஆண்ட்ரூ லூயிஸ், கேபிள் சங்கர் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
அதுமட்டுமின்றி இவர்களுடன் முன்னணி நடிகர்கள் விஜய் ஆண்டனி, கெளதம் கார்த்திக், சிபி சத்யராஜ், மனோபாலா, சுஹாசினி, ரோகினி, லிசி, பிரசன்னா, சிநேகா, ஆர்.கே. சுரேஷ், சச்சு, தியாகராஜன், பிரசாந்த், நகுல், சதீஷ், கணேஷ் வெங்கட்ராம், குட்டி பத்மினி, விதார்த், நட்டி, பஞ்சு சுப்பு, பூர்ணிமா பாக்ய ராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சிதார்த்தா சங்கர், அஷ்வின் காக்குமனு, கயல் சந்திரன், ஜெயப்பிரகாஷ், சுரேஷ் ரவி, விஜே ரம்யா, விச்சு உட்பட பலர் இத்திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.