Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளரை கொன்று கூவம் அருகே வீசிய கொடூரம்….. ஒருவர் கைது….. சென்னையில் பரபரப்பு….!!!!

தொழிலதிபரை கொடூரமான முறையில் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற பாஸ்கரன் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் சின்மயா நகரில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் ஒருவர் பிணமாக கிடந்ததை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பிளாஸ்டிக் பையை  பார்த்த போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், பலத்த காயங்களுடன் பாஸ்கரன் பிணமாக கிடந்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் பாஸ்கரனின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பாஸ்கரனின் கார் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்  நின்றதும், அங்கு வசித்து வரும் கணேசன் என்பவர் திடீரென மாயமானதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்த நிலையில் கணேசனை இன்று கைது செய்துள்ளனர். மேலும் மறைந்த பாஸ்கர் கட்டுமான தொழில் செய்து வந்ததோடு ஒரு சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |