நெல்சன் திலீப் குமார் நடிகர் விஜய் வைத்து முதன்முறையாக இயக்கியிருந்த பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பெரிய அளவில் படம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவ்வளவாக வசூலை பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல முறையில் வரவில்லை. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் வாரிசு படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தானா நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் மருத்துவமனை காட்சி கடந்த வாரம் வெளியான நிலையில், நேற்று விஜய்யும், ராஷ்மிகாவும் இருப்பது போன்ற புதிய வீடியோ லீக்கானது. இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாரிசு’ படத்தின் புகைப்படம், வீடியோக்களை ரசிகர்கள் தயவு செய்து பகிரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.