மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் “வீட்ல விசேஷம்” ஆகும். இந்த படத்தை என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கி இருக்கின்றனர். இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி, கே.பி, எஸ்.லலிதா, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த “பதாய் ஹோ” படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தினை போனிகபூரின் பே வியூ புரொஜக்ட்ஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடி யோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள சூழ்நிலையில், இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதனைதொடர்ந்து நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் “இதுபோன்று ஃபன்னிதான் சாங் அனோன்ஸ் மெண்ட் வீடியோ எல்லாம் பண்ணுனாரு நம்முடைய நெல்சன்.. டேய் நெல்சா” என பதிவிட்டு இருந்தனர்.
அவற்றிற்கு பதில் கூறிய ஆர்ஜே.பாலாஜி,”நெல்சன் மிகப் பெரிய இயக்குனராவார். நான் பல்வேறு ஷோஸ்களில் அவருடன் பணிபுரிந்து இருக்கிறேன். அவருடைய திரைப்படங்களின் தீவிர ரசிகன் நான். எதிர் காலத்தில் அவர் தன் படங்களின் வாயிலாக நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார். தயவுசெய்து இப்படி பேசுவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.