புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் அவ்வையார் விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் பொழுது பெற்றோர்கள் அனைவரும் சிறிது யோசித்து நல்ல தமிழ் பெயராக சூட்டுங்கள். இதனை நான் கவர்னராக கூறவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவராக கூறுகிறேன். ஏதோ வாயில் நுழையாத சூட்டுவதால் தமிழ் மறைக்கப்படுகிறது. அதனை தடுக்க சுத்த தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவதை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
Categories
“தயவுசெய்து இதை மட்டும் பண்ணுங்க…!!” தமிழிசை வேண்டுகோள்…!!
