நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியில் பல மட்டங்களில் பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்கள் திமுகவில் இணைந்தனர். கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்ததை தொடர்ந்து இந்த நிகழ்வு அவரின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியில் விலகிய உறுப்பினர் பேசும் போது,
சீமானுடைய பேச்சுக்கும், செயல்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. அவர் தம்பி என்றதே வெறும் வார்த்தை தான். கடந்த 2009இல் இயக்கமாக ஆரம்பித்து 2010இல் கட்சியாக தொடங்கினார். அன்று முதல் நான் இருக்கின்றேன். உண்மைக்கு அங்க மதிப்பில்லை. உண்மை எங்கு இருக்கோ அங்க வரலாம் என்று ராஜிவ் காந்தியுடன் திமுக வந்துள்ளேன் என தெரிவித்தார்.
வட சென்னை கிழக்கு மாவட்டத்தின் வீர வீரத்தமிழர் முன்னணியின் மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் காதர் பேசிய போது, கடந்த பத்தாண்டுகளாக தமிழ் தேசிய காலத்தில் பயணித்தேன். தொடர்ச்சியாக மாவட்ட பொறுப்புகளிலும், தொகுதி பொறுப்புகளிலும் இருந்து வந்தேன். 2009இல் ஈழப் போரின் உச்சகட்டத்தில் தமிழ்தேசிய உணர்வெழுச்சியோடு வந்த பிள்ளைகளை 2016 க்கு பிறகு அண்ணன் சீமான் மடைமாற்றம் செய்கிறார் என்று தான் எங்களுக்கு தோணுகிறது.
2016இல் தேர்தல் களத்தை சந்திக்கும் பொழுது மிகக் குறைவான நபர்கள். சிறப்பாக இயக்க பணியை செய்து கொண்டு இருந்தோம். அதன் பிறகு உணர்வாளர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் கூட ஜனநாயகம் இல்லை. ஒரு வேட்பாளரை தீர்மானிக்கும் பொழுது குறைந்தபட்சம் மாவட்ட செயலாளர், தொகுதி செயலாளரிடம் பரிசீலனை பண்ணனும்.
அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் கிடையாது. இதுகுறித்து தலைமையிடம் சொன்னால் கேட்கணும், ஆனா தொடர்ச்சியா இதுபோன்று ஜனநாயகம் முற்றிலுமான மறுக்கப்பட்டது. அதனால ராஜீவ்காந்தி அண்ணன் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாங்கள் இணைந்து விட்டோம்.