Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி உதயநிதி சொல்லுங்க….! அப்போ உங்க நிலைப்பாடு…. இப்போ வாயை மூடு அப்படி தானே…. கொதித்தெழுந்த சீமான்

நாங்க ஆட்சிக்கு வந்தா 7 பேரையும் விடுதலை செய்து விடுவோம்னு திமுகவால் சொல்ல முடியுமா ? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து திமுக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது, தெரிவிக்க முடியாது. ஏனென்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்த பிறகுதான் குறைந்தது என் தம்பி பயாஸ்சுக்கு சிறை விடுப்பு கிடைத்துள்ளது. நான் முதல்வரை சந்திக்கும் போது இது குறித்து அரை மணி நேரத்துக்கு மேலாக பேசணும். அப்போதும் ஆளுநர் வந்து வெயிட் வெயிட் என்று காலம் கடத்தினார். நாங்க எவ்வளவு அழுத்தம் கொடுத்து பார்க்கிறேன் கையெழுத்து போட மாட்டேங்குறாரு என என்கிட்ட வருந்தினார்.

நான் வேலூர் சிறையில் இருக்கும்போது அக்கா நளினியின் விடுதலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காக வரும்போது இரண்டு முறை நீதிமன்றம் சொல்லுது நளினியின் விடுதலை மாநில மாநில ஆட்சியின் கையில் இருக்கிறது. அப்போது தமிழக அரசு  உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கொடுத்ததில், நளினியை விடுதலை செய்தால் அவர் முக்கியமான நபர்கள் குடியிருக்கின்ற தெருவில் குடியிருப்பார். அவர்கள் உயிருக்கு நளினியால் ஆபத்து ஏற்படும் அதனால் நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சொன்னது திமுக.

சான்று வேணும்னா நான் தாறேன். அப்போது நான் சிறையில் இருந்தேன். இரண்டு முறை விடுதலை திமுக அரசின் கையில் இருந்தது, அதை கெடுத்து விட்டீர்கள். இன்றைக்கு கேரள ஆளுநராக இருக்கக்கூடிய மாண்புமிகு நீதியரசர் சதாசிவம் அவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதியாக வர போறாருனு தெரிஞ்சி, அவர்கிட்ட போயி நானும்,  எங்க ஐயா பாப்பா மோகன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் இந்த பரிந்துரையை வைக்கிறோம். ஐயா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள போராட்டம், உணர்வுக்கு மதிப்பளித்து ஒரு நல்ல முடிவு வரும் என்று சொன்னார்.

அந்த நேரத்தில் அன்னைக்கு ஐயா கலைஞர் அவர்கள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் சமயத்துல, தேர்தல் நேரத்துல சாதக –  பாதங்களை கவனத்தில் வைத்துக் கொள்ளாமல் ஒரு நீதியரசர் இப்படி பேசுவதா ? அப்படின்னு ஒரு அச்சுறுத்தலை போட்டவுடன் அவர் அப்படியே பின் எடுத்து விட்டார். எல்லா இடங்களிலும் திமுக அதிகாரத்தில் இருக்கும்போது அதை பற்றி பேசாமல் அதற்கு இடையூறாக இருந்து விட்டு, திமுகவே நளினியை தவிர எல்லோரையும் தூக்கில் போடணும்னு சொன்னது இருக்கே… மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து படித்தாரே…

தம்பி உதயநிதி அஞ்சு மாசம் கழிச்சு ஏழு பேரை விடுதலை செய்து விடுவோம் என்று ஒரு தடவை சொல்லுங்கள். ஆளுநருக்கு கடிதம் கொடுக்கறது சரி, நாங்க ஆட்சிக்கு வந்தா 7 பேரையும் விடுதலை செய்து விடுவோம்னு சொல்லுங்க. அப்போ எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு,  ஆளுங்கட்சியாக இருக்கும்போது வாய மூடு என்றால் என்ன அர்த்தம் என சீமான் கொந்தளித்தார்.

Categories

Tech |