Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தம்பிக்கு உதவியதால்…. வசமாக சிக்கிய அண்ணன்கள்…. போக்சோவில் அதிரடி கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்ற அண்ணன் தம்பி 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள தொட்டிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அக்கரைப்பட்டியை சேர்ந்த நந்தகுமார்(24) மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையறிந்த மாணவியின் தந்தை உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நந்தகுமார் மற்றும் அவரது சகோதரர்கள் ரத்தினவேல்(26), சதீஷ்குமார்(32) ஆகியோர் கடத்திய மாணவியை அவரது வீட்டின் அருகே விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் வெண்ணந்தூர் அருகே பதுங்கி இருந்த நந்தகுமார் மற்றும் கடத்தலுக்கு உதவிய ரத்தினவேல் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |