Categories
தேசிய செய்திகள்

தம்பதியினர் கை, கால்களை கட்டி போட்டு நகை பணம் கொள்ளை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!!

பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி சுவட்டு பாடம் பகுதியைச் சேர்ந்த ஜோணி(54),ஜோளி (48) தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தம்பதியினரை தாக்கி மயக்கமடைய செய்திருக்கின்றனர் மேலும் கயிறு கொண்டு அவர்களின் கை கால்களையும் துணியைக் கொண்டு வாயையும் கட்டியிருக்கின்றனர். இதனை அடுத்து அந்த ஆறு பேரும் சேர்ந்து வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் செல்வதற்கு முன்னதாக அந்த கும்பல் அவர்களின் கை கால்களை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதனை அடுத்து மயக்கம் தெளிந்த பின் அவர்கள் இரண்டு பேரும் கூச்சலிட்டள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றுள்ளனர். அதன் பின் கொள்ளை கும்பல் தாக்கியதில் காயமடைந்த இரண்டு பேரும் மீட்ககப்பட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது பற்றி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |