Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி…. “ஹோட்டல் பாதுகாவலரை தாக்குதல்”…. 4 பேர் மீது வழக்கு பதிவு…!!!!

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறியதால் தகராறு ஏற்பட்டதில் ஹோட்டல் பாதுகாவலர்களை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இங்கு தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு எட்டு முப்பது மணி அளவில் சொகுசு காரில் வந்த நான்கு பேர் ஹோட்டலுக்கு உள்ளே செல்ல முயன்றார்கள். அப்பொழுது பணியில் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த நால்வரும் பாதுகாவலர்களிடம் தகராறில் ஈடுபட்டார்கள்.

இதன் பின்னர் நால்வரும் பாதுகாவலரை தாக்கினார்கள். மேலும் ஹோட்டல் கேஷியரையும் மிரட்டியதாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். இதன் பின்னர் நட்சத்திர ஓட்டல் கேஷியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜான்சன், டேவிட், லட்சுமணன், ஜெர்ரி உள்ளிட்ட நான்கு பேர் மீது தாக்குதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |