கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் வாயிலாக சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மருத்துவ படிப்பை தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
உக்ரைனில் இருந்து வந்த தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். மேலும் போலந்து போன்ற நாடுகளிலும் உக்ரைனில் உள்ள மருத்துவ பாடத்திட்டமே இருப்பதால், சிலர் அங்கு படிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். எப்படியோ தமிழில் எம்பிபிஎஸ் படிப்பவர்களை தரக்குறைவாக கருதாமல் இருந்தால் சரிதான் என்று கூறப்பட்டுள்ளது.