Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு “பெருந்தலைவர் காமராஜர் விருது” …. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை  சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து காமராஜர் விருது வழங்க அரசாணை உடன் இணைக்கப்பட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஊழிய போட்டிகளை நடத்தி அதன் விவரங்களை தயாராக வைத்துக் கொள்ளுமாறு ஏற்கனவே முதன்மை கல்வி அலுவலர்களிடம் கூறப்பட்டது.

இந்த நிலையில் பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற 15 மாணவ-மாணவிகளின் பெயர்களையும், மதிப்பெண்களையும் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி கல்வித்துறை  அனுப்ப வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |