Categories
மாநில செய்திகள்

தமிழ் பேராயம் விருது…. “ஏப்ரல் 30-ம் தேதிக்குள்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ் பேராய விருதுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் பேராயம் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல், சிறந்த தமிழறிஞர், தமிழ் சங்கம், தமிழ் இதழ் உள்ளிட்ட 12 தலைப்புகளில் விருதுகள் வழங்குகிறது. இந்த விருதுக்கான அறிவிப்பு குறித்து எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்லூரி வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ் அறிஞர் மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கு 3 லட்ச ரூபாய் பரிசுடன் பாரி வேந்தர் விருது வழங்கப்படுகிறது.

இதனையடுத்து முத்தமிழ் அறிஞர், கலைஞர் சமூக நீதி விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, முத்து தாண்டவர் தமிழ் இசை விருது, அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு விருது, ஜி.யு போப் மொழிபெயர்ப்பு விருது, அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது போன்றவைகள் தலா 1 லட்சம் பரிசுடன் வழங்கப்பட இருக்கிறது.

சிறந்த கலைக்குழு விருது, சிறந்த தமிழ் சங்கம், சிறந்த தமிழ், இதழ் விருதுகள் போன்றவைகள் தலா 50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தலைவர் தமிழ் பேராயம், அறை எண் 518, ஐந்தாம் தலம் எஸ்.ஆர்.எம் பல்கலை நிர்வாக கட்டிடம், காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம்-603 203 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை 044-2741 7375, 2741 7376 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவும், [email protected] என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |