தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான லாஸ்லியாவின் தந்தை திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அவருக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளங்களில் பல ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை லாஸ்லியா மற்றும் இயக்குனர் சேரன் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.