Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல நடிகர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பிரபல நடிகர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் நகுல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் பாய்ஸ் ,காதலில் விழுந்தேன் ,மாசிலாமணி ,தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |