தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும் அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன் வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது :”சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகியவற்றின் இந்த ஆண்டு முதல் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறக்கூடிய சான்விச் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த படிப்புகளில் மொத்தம் ஏழு பருவங்கள் இருக்கும். இவற்றில் சேரும் மாணவர்கள் மூன்றரை ஆண்டு கல்வி கற்பார்கள் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும், அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன்வந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.