தமிழ் சினிமாவில் வெப்பம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நானி. இவர் தொடர்ந்து ஆஹா கல்யாண உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து இவர் தமிழில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நஸ்ரியாவுடன் இணைந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் சுந்தரானிகி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் “அடடே சுந்தரா” என்ற பெயரில் வருகின்ற 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் போஸ்டர்கள் ஆகியவை முன்னதாகவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் காமெடி படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாம் சிங்கா ராய் போன்ற ஆக்ஷன் படத்தில் நடித்துவிட்டு முற்றிலும் மாறுபட்ட இந்த திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சில படங்களில் தமிழில் நடித்திருந்தாலும் தன்னால் தமிழ் படங்களில் தொடர்ந்து கமிட் ஆக முடியவில்லை என்று நானி தெரிவித்துள்ளார். எனக்கு தமிழில் சரளமாக பேச முடியவில்லை என்றும் தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் தமிழில் தெளிவாகப் பேச கற்றுக் கொண்டு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் அவர கூறியுள்ளார். மேலும் விரைவில் தமிழ் படங்களில் நானி தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் தற்போது வெளியாக உள்ள அடடே சுந்தரா படத்திலும் கலகலப்பான நானியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.