‘வாய்தா’ பட நாயகி பவுலின் ஜெசிகா, “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்திருந்தார். இந்நிலையில் . நடிகை பவுலினா மரணத்தில் திடீர் திருப்பமாக, தனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பவுலினாவை திருமணமான இயக்குநர் காதல் வலையில் வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை திருமணம் செய்ய நடிகை வலியுறுத்த, அதற்கு இயக்குநர் தனக்கு மணமாகி குழந்தைகள் உள்ளதால், லிவிங் டூ கெதரில் வாழலாம் என கூறினாராம். மேலும், இருவரும் நெருக்கமாக இருந்த படங்கள், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில், அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்துகின்றனர்.