தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்விக்கு அசத்தலான பதிலைக் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி.
பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒளிபரப்பாகின்றது. தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகின்றார். ஏற்கனவே தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானர் பிந்துமாதவி. தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக உள்ளார். நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நாகார்ஜுனா பிந்து மாதவியிடம் உங்களுக்கு தமிழ் சினிமா பிடிக்குமா? அல்லது தெலுங்கு சினிமா பிடிக்குமா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிந்து மாதவி கூறியுள்ளதாவது, “சார், அது நல்லது இது நல்லதில்லை என ஒன்றுமே இல்லை. சென்னைக்கும் எனக்கும் ஆழமான உறவு உள்ளது. சென்னைக்கென எனது மனதில் தனி இடம் உள்ளது. தெலுங்கு எனது தாய் மொழி. ஆதலால் இரண்டும் எனது இரு கண்கள் என கூறியுள்ளார். இதற்கு நாகார்ஜுனா நல்ல பதில் என பாராட்டியுள்ளார். பிந்துமாதவியின் பதிலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.