Categories
சினிமா

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம்…. பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். தற்போது இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா சென்னை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் லேசான மஞ்சள் காமாலை நோய் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் நலமாக உள்ளார். மருத்துவர்கள் பாரதிராஜாவை சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Categories

Tech |