கேரள அரசு, எண்டே பூமி’ என்ற பெயரில், தமிழகம், கேரளா எல்லை பகுதிகளில் ‘டிஜிட்டல் நில அளவீடு செய்து, கேரள மாநில எல்லைகளை, தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருகிறது. ‘தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு தி.மு.க.,விற்கு உண்டு; அதை தொடர தமிழக பா.ஜக., அனுமதிக்காது.
தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட, கேரளா அரசு கொண்டு செல்ல தமிழக பா.ஜ, அனுமதிக்காது.தமிழக எல்லைக்குள் கேரளா நில அளவீடு செய்வதை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மேலும் எல்லை தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.