Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 5 கோவில்களில்…. இனி ரோப் கார் வசதி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் பயனின்றி உள்ளது. அதை வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டியை கோவில் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் திருத்தணி, சோளிங்கர், திருக்கழுகுன்றம், திருச்செங்கோடு, திருச்சி ஆகிய ஐந்து கோயில்கள் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |