தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்கிறார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கோவில்கள் மற்றும் துணிக் கடைகள் திறக்க அனுமதி,பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகளும் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.