கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு இன்று அதன் இரண்டாவது பகுதி தொடங்கி நடைபெற்றது. முதலில் சட்டப்பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் உலக முதலீட்டார்ளர்கள் மாநாடு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 10 மாதங்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க துபாய்க்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் துபாய் பயணத்தின் போது ரூபாய் 6 ஆயிரத்து 500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டாய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும். விரைவில் முதலீடு தொடர்பாக குழு ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.