Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ரூ. 2 பைசா மட்டுமே… மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து….!!

தமிழ்நாட்டிற்கு பெட்ரோலுக்கு வழங்கப்படும் வரியில் இரண்டு பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்து கொண்டே உள்ளது. சென்னையில் 95 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை இன்று 98.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.  கொடைக்கானல் மற்றும் மயிலாடுதுறை போன்ற இடங்களில் 100 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் விலை உயர்வை முன்வைத்து பலதரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் “மன்மோகன் சிங் அரசில் பெட்ரோல் ரூபாய் 9.48 வரி இருந்தபோது தமிழ்நாட்டிற்கு ஒரு லிட்டருக்கு 15 பைசா கிடைத்தது. ஆனால் தற்போது மோடி அரசு ரூ. 32.33 வரியை வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வெறும் இரண்டு பைசா மட்டுமே கொடுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |