Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் ஆளுநரானது பெருமை – புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!!

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று புதிய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்..

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி..

அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. இதனால் தமிழகத்தின் 26 ஆவது புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றுள்ளார்..

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, தனபால், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் மத்திய இணையமைச்சர் எ.ல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், என பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட பின் ஆர்.என் ரவி ராஜ் பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது, தமிழில் “வணக்கம்” என கூறி பேச தொடங்கிய அவர்,  பழம்பெருமை வாய்ந்த தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்குட்பட்டது, அதற்கேற்ப செயல்படுவேன். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன் என்று கூறினார்..

Categories

Tech |