Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின்வாரியம் புதிய சாதனை!…. அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மற்றும் ஐக்கியஅரபு நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அடிப்படையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று அதிகபட்ச மின்சாரம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகள் மூலம் மின்வாரிய வரலாற்றில் உச்சபட்ச மின் தேவையாக நேற்று 17,106 மெகாவாட் மின்சாரம் வழங்கி பூரத்தி செய்துள்ளது. இதற்கு முன்னதாக 09.04.2021-ல் 16 ஆயிரத்து 846 மெகாவாட் பதிவாகி இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |