தமிழ்நாடு இன்று தமிழ்ச் சொல்லின் உச்சரிப்பு மாறாமல் ஆங்கிலத்திலும் எழுத கோரும் மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை அந்த மொழியின் உச்சரிப்பின் அடிப்படையிலேயே உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு என மாற்றினால் உச்சரிப்பு சரியாக வரும் என்பதால் அந்த எழுத்துக்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் , ஆனந்தி அமர்வு ஆங்கிலேயருக்கும் வடமொழிக்கும் சிறப்பு ழகரம் உச்சரிப்பதற்கு வராது என தெரிவித்தனர். பிற மாநிலத்தவருக்காக தமது சிறப்பை ஏன் இழக்க வேண்டும் என விவாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை அதற்கான உச்சரிப்பு மாறாமல் வரும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவை பிறப்பிக்க இயலாது என தெரிவித்த நீதிபதிகள் தமிழின் சிறப்பை கருத்தில் கொண்டு தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், முதன்மைச் செயலர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.