தமிழ்நாடு சினிமா மற்றும் சீரியல் களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை சென்னையில் நடைபெற இருக்கின்றது.
தமிழ்நாடு அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நாளை மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது.
இந்த விருது விழாவில் 2009 முதல் 2014 ஆம் வருடங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசுக்கான காசோலையும் சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 5 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது. இது போல சின்னத்திரை விருதுகள் 2009 ஆம் வருடம் முதல் 2013 ஆம் வருடம் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்!
2009, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியல் அறிவிப்பு! pic.twitter.com/W03NcVr38D
— Diamond Babu (@idiamondbabu) September 2, 2022