Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு”….. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை  இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் திரு.பி. அருண் ராய் , ஒன்றிய வர்த்தகத் துறையின் கூடுதல் இயக்குனர் திரு சண்முகசுந்தரம் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டை உலக அளவில் வர்த்தகம் மற்றும்  வணிகம் முதன்மை  மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு, இந்த மாநாட்டை இந்தியாவின் சுதந்திர தின விழா 75 வது வருடத்தில் முன்னிட்டு தமிழ்நாடு அரசு ,ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து “வர்த்தகம் மற்றும் வணிக வாரம்” நிகழ்வினை நடத்துகின்றனர்.

மேலும் இவ்விழாவின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமைய உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கையேடு வெளியிடுவார் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |