தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக 8,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 1ஆம் தேதி முதல் சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 3000 வழங்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 500 வழங்கவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1000 வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Categories
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!
