Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்தாய் வாழ்த்து தெரியல…! திணறிய அமைச்சர் ஜெயக்குமார்…. வைரலாகும் வீடியோ …!!

கல்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் மேடையிலே திணறினார்.

புதுப்பட்டினம் மற்றும் உய்யாளி குப்பம் மீனவர்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தொடங்குவது வழக்கம். ஆனால் கல்பாக்கத்தில் நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் தமிழ் தாய் வாழ்த்து பாடாததை அமைச்சர்கள் உணர்ந்தனர்.

அதன்பிறகு மேடையில் நின்றவாறு அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் தாய் வாழ்த்து பாட தொடங்கினார். ஓரிரு வரிகள் பாடியவர், அடுத்த வரி தெரியாமல் தடுமாறினார். பக்கத்திலிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஒவ்வொரு வரியாக சொல்லச்சொல்ல அமைச்சர் ஒருவழியாக பாடி முடித்தார். அரசு நிகழ்ச்சியில் தொடக்கத்தில்  தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் இடையில் பாடியது ஒருபுறம் என்றால்,  மறுபுறம் தமிழ் தாய் வாழ்த்து தெரியாமல் அமைச்சர் ஜெயக்குமார் உளறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Categories

Tech |