தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது. இலவச கல்வி என்ற பெயரில் ஒன்றிய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவது போல தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 95 விழுக்காடு மாணவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவது அநீதியானது. எனவே தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும், மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெளிமாநிலங்களில் இருந்து பெருவாரியான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ் மொழியை இங்கு விருப்ப பாடமாக தேர்வு செய்து கொள்ள முடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ் மொழியை இப்பள்ளிகளில் கட்டாயமாக்க முடியாது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை கட்டாய பாடமாக்க உத்தரவிட முடியாது என்று கூறி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.