Categories
மாநில செய்திகள்

தமிழை ஒழித்துக்கட்டும் கேந்திர வித்யாலயா பள்ளி எதற்கு…? வைகோ கேள்வி…!!!

தமிழ்நாட்டில் தமிழை கற்பிக்காத கேந்திர வித்யாலயா எதற்கு? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பாஜக அரசு இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலை நிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சமஸ்கிருத மொழியை பேசுகின்றனர். மீதமுள்ள 135 கோடி மக்களுக்கு இந்த மொழியை திணிப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழ்மொழி செம்மொழி என்று அறிவித்துவிட்டு, அதற்கு வெறும் 22 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி இருக்கிறது. மற்ற மொழிகளுக்கு அதிக அளவு பணத்தை செலவிட்டுள்ளது.

முன்னதாக கேந்திர வித்யாலயா பள்ளியில் 1 முதல் 6 வரையில் மாநில மொழிகளில் படிக்கலாம் எனவும், 6 முதல் 9 வகுப்பு வரையில் விருப்பப்பாடமாக ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது தமிழ் மொழியை முழுவதுமாக நீக்கி விட்டு இந்தி, ஆங்கிலத்துடன் சேர்த்து ஆறாம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதம் விருப்பப்பாடம் என ஆக்கியுள்ளது. தமிழை ஒழித்து கட்ட வேண்டும் என்று மோடி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கொரோனா முடக்கத்தை பயன்படுத்தி இணைய வழியில் படிக்கின்ற மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |