Categories
சினிமா

“தமிழில் ரீமேக் படங்களில் நடிக்காத ஹீரோ நான்தான்”… நேர்காணலில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…!!!

நேர்காணலின் போது சிவகார்த்திகேயன், தமிழில் ரீமேக் படங்களில் நடிக்காத நடிகன் நான் மட்டுமே என பெருமையாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணலின் போது சிவகார்த்திகேயன் தமிழில் ரீமேக் படங்களை பண்ணாத ஹீரோ நான்தான் என பெருமையாக கூறியுள்ளார்.

நேர்காணலின் போது அவர் பேசியதாவது, “தமிழில் ரீமேக் படங்களில் நடிக்காத ஹீரோ நான்தான். பிரேமம், அல வைகுண்டபுரமுலோ மற்றும் சில ஹிந்தி திரைப்படங்களின், தமிழ் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அதை நான் மறுந்து விட்டேன். காரணம் ரீமேக் படங்களில் நடிப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும். அதை நாம் கொடுப்பது கஷ்டம். அதனால் ரீமேக் படங்களில் நடிக்காமல் தவிர்த்து விட்டேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |