டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பின் போது பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ரஜீவகாந்தி புகழ் வாழ்க என விஜய்வசந்த் எம்.பி. குறிப்பிட்டார்.