Categories
மாநில செய்திகள்

இனி கோவில்களில் தமிழ் கட்டாயம்…. மீறினால் ரூ10,00,000 அபராதம்…. நீதிமன்றம் அதிரடி..!!

தமிழ் மொழியில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகள் இனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்து அறநிலையத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பசுபதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போதும் இந்த உத்தரவு வெளியானது. தஞ்சையில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போதும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆகம விதிகளை பெரும்பாலான கோயில்கள் பின்பற்றுவதில்லை. சமஸ்கிருத மொழியில்தான் மந்திரங்களை ஓதி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக நிலவி வருகின்றது.

இதனால் தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன. இப்போது வெளியாகியிருக்கும் இந்த தீர்ப்பு தமிழ்மொழி ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதக் செய்தி வாசிப்பதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

Categories

Tech |