முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டாட்சிக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது மாநிலங்களின் உரிமையை காக்க முதல் ஆளாக நிற்பவர் ஸ்டாலின்.
மேலும் தமிழர்களும் மலையாளிகளும் மண்ணின் குழந்தைகள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.
கேரளாவுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆளாக ஓடி வந்து நிற்பவர் ஸ்டாலின். தமிழர்களுக்கு கேரளா மக்களுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் மேலும் மேலும் உறுதி செய்கிறார். அதோடு தமிழக முதல்வருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!” இவ்வாறு அவர் கூறினார்.