Categories
மாநில செய்திகள்

BREAKING : 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு….  தமிழர்களை பெருமைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சட்டசபையில் இன்றும் நாளையும் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த இரண்டு துறைகளும் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வசம் இருக்கின்றது. சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின் சமூக கால தமிழர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்த நகர பண்பாட்டை பெற்றிருந்ததாகவும், கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும் கீழடி அகழாய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு (கி.மு. 1615 – கி.மு. 2172 ) முன்னரே இரும்பு பயன்பாடு இருந்ததாகவும், இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான் வனங்களை அழித்து வேளாண்மை செய்ய தமிழர்கள் தொடங்கியதாகவும் தெரிவித்தார். இப்படி சட்டப்பேரவையில் தமிழர்களின் பண்பாட்டை பற்றி முதல்வர் முக ஸ்டாலின் பேசி வருகிறார்.

Categories

Tech |