Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டுள் ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு முதலில் இரண்டு குழிகள் தோண்டப்பட்ட போது மணிகள், பாசி, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய கருப்பு கலர் உடைய மண் தட்டு, மண் கிண்ணங்கள், குடிதண்ணீர் பானைக்கு கீழே வைக்கும் மண்ணாலான பிரிமனை உட்பட பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது அங்கு இரண்டு குழிகள் தோண்டப்பட்டு வரும் நிலையில் மூன்றாவது குழியில் மண்பானை பகுதி சேதமுற்ற நிலையில் சுவர் பகுதியுடன் ஒட்டி இருப்பது போல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பானையின் வடிவம் பற்றி தொடர்ந்து பணிகள் செய்யும் போது தெரிய வரும். இதுவரை ஆராய்ச்சி பணியில் கீழடி பகுதியில் மண் கிண்ணங்கள், சிறிய பெரிய பானைகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |