Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இரண்டு மண்கிண்ணங்கள் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி நாகரிகம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் அகழ்வாராய்ச்சி கீழடியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அகரத்திலும், கொந்தகையிலும் அடுத்தடுத்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

கீழடியில் சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், பாசிமணிகள், சிறிய பானைகள், மண்பாண்ட ஓடுகள் ஆகியவை கிடைத்தன. மற்றொரு குழியில் கிண்ணங்கள், சிறிய பானைகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய வெள்ளிக்காசுகள், மண்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இந்நிலையில் நேற்று நடந்த அகழ்வாராய்ச்சியில் மண் கிண்ணங்கள் 2 குழிகளில் கிடைத்தன. ஒரு குழியில் சாதாரண மண் கிண்ணமும், கருப்பு வண்ணங்களுடன் கூடிய மண் கிண்ணமும் கிடைத்துள்ளது. பழங்கால தமிழர்கள் இந்த இரண்டு மண் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அங்கு மேலும் குழிகள் ஆழமாகத் தோண்ட தோண்ட பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

Categories

Tech |