Categories
உலக செய்திகள்

தமிழரான பிரிட்டன் மருத்துவர் மரணம்… அயராது உழைத்து உயிர்களை காப்பாற்றியவர்… சக மருத்துவர்கள் உருக்கம்…!!

கொரோனாவால் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்டன் மருத்துவர் பற்றிய நினைவுகளை அவருடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர்.

பிரிட்டனில் இருக்கும் Royal Derby என்ற மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த தமிழர் கிருஷ்ணன் சுப்ரமணியன் (46). இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் Leicesterல் இருக்கும் க்ளின்பீல்டு என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாதத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த சில மருத்துவர்கள் அவரை பற்றிய சில நினைவுகளை பகிர்ந்துள்ளனர். அதில், “அதிக கவனம் தேவைப்படும் நோயாளிகளுக்காக சுப்பிரமணியன் கடுமையாக உழைப்பார் என்று மருத்துவ அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான காவின் போயல் தெரிவித்துள்ளார். மேலும் சுப்ரமணியனின் மரணம் எங்களது பணியாளர்கள் அனைவருக்குமே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடன் பணிபுரிந்த சக மருத்துவரான ஜான் வில்லியம்ஸ் கூறியதாவது, சுப்ரமணியன் பணியில் மிக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படகூடியவர், பயிற்சி மருத்துவர்கள் உடனும் இணைந்தும் கடுமையாக உழைப்பவர், எப்போதுமே பரபரப்பாக செயல்படும் நிலையில் தான் இருந்தார். மேலும் அவரின் அமைதியான குணம், அவருடன் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றாக தெரியும் என்று உருக்கமாக தெரிவித்தார்.

Categories

Tech |