தமிழகத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணை நவம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விதமாக கடந்த வருடம் ஒரு லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது.
அதனைப் போலவே நடப்பாண்டில் 50000 விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு அரசாணை வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சொன்னது சொன்னது போல நிறைவேற்றி வருகின்றோம். மீதமுள்ள அனைவருக்கும் படிப்படியாக ஆணைகள் வழங்கப்படும். இதில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் அரசாணை வழங்கப்படும் போது அதில் 100 பேர் வரவில்லை என்றாலும் கூட அடுத்து இருக்கின்ற 100 பேருக்கு இந்த ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.