பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையினை 4,43,000 விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பேரிடரால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் 2057 கோடி நிதியை தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ஒதுக்கப்பட்டு தற்போது வரை 63,331 ஏக்கர் பரப்பளவு 85 ஆயிரத்து 597 விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனை கருதி அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்து பலன் அடையுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே தமிழக முழுவதும் உள்ள விவசாயிகள் அரசின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.