தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி ,சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருட்களை மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் இந்த ரேஷன் கார்டு முக்கியமாக எடுத்துக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் அனைத்தும் உணவு பொருள் வழங்கல் துறையின் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலமே ஆக்டிவேட் செய்யப்படவேண்டும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ரேஷன் பொருட்களை பொறுத்தவரை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் ரேஷன் கடைகளில் பொருள்களின் தரம் சரி இல்லை என்பது பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு தமிழகம் முழுவதும் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் இந்த ரேஷன் அரிசியை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், அவற்றில் புழு, பூச்சிகள் கிடப்பதை பார்த்து, மக்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளிக்கும் பட்சத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வருகின்ற பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய தமிழக அரசு ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்று அறியும் பட்சத்தில், அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஏனென்றால், உணவு பொருள் தரம் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்புவதால் தங்களது உயர் அதிகாரிகள் இடையே பகைமை உணர்வு ஏற்படும் என்பதை அவர்கள் விரும்புவதில்லை.
இந்நிலையில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ,கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாகவே மோசமான நிலையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதைத்தவிர, தேரூர், மருங்கூர், கொட்டாரம், அழகியபாண்டிய புரம், தோவாளை, ஆரல்வாய்மொழி மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளிலும் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான அரிசியை வழங்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தேரூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர், கூட்டுறவு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ கூறியுள்ளார். ஆகவே இந்த நடவடிக்கையால் தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கும் சூழல் உள்ளதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.