தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படுவது போல நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி கட்டாயம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஊதிய உயர்வும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல அகவிலைப்படி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அதுபோல நியாய விலை கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி கட்டாயம் உயர்த்தப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் நியாய விலை கடை பணியாளர்கள் பணி நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.